சம்மதத்துடன் இணையும் பெண்களுக்கிடையேயான ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவது மனித உரிமை மீறல் என்று ஐ.நா உரிமைகள் அமைப்பு தீர்ப்பு விதித்துள்ளது

“இலங்கையின் LGBTIQ சமூகத்திற்கான முக்கிய வெற்றி” என்று EQUAL GROUND கூறுகிறது இலங்கையில் பெண்களுக்கிடையிலான ஒருமித்த, ஒரே பாலின உறவுகளை குற்றமாக்குவது மனித உரிமை மீறல் என்று கண்டறிந்த ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் முக்கிய தீர்மானத்தை EQUAL GROUND வரவேற்கிறது. மனித கண்ணியம் அறக்கட்டளையின் (Human Dignity Trust-HDT) ஆதரவுடன் ஐ.நா.வில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் (Convention on the Elimination of All Forms of Discrimination against Women – CEDAW) அகற்றுவதற்கான மாநாட்டிற்கு ரொசன்னா ஃபிளேமர்-கல்தேரா …

தன்பாலீர்ப்பினர் மீதான வெறுப்பு மற்றும் பாரபட்சம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கும், அமா திஸாநாயக்கவுக்கும் எதிரான EQUAL GROUND க்கு ரிட் மனுவைத் தொடருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

இன்று புதன்கிழமை (08 டிசம்பர் 2021),பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கண்டி எல்லையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழஹகோன் மற்றும் உத்தேசிக்கப்பட்ட ஆலோசகரும் பயிற்சியாளருமான அமா திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக EQUAL GROUND மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இப்பயிற்சியின் போது இலங்கையில் உள்ள தன்பாலீர்ப்பின பெண்கள்,  தன்பாலீர்ப்பின ஆண்கள்,  ஈர்பாலீர்ப்பினர்கள்,  திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்கள்/வினவினர் (LGBTIQ) சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையிலும் பாகுபாடு காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார். …

தன்பாலீர்ப்பினவெறுப்பு பிரசங்கத்துக்கு எதிராக பொலிஸாருக்கும் அமா திஸாநாயக்கவிற்கும் மனு தாக்கல் வழங்குமாறு EQUAL GROUND மற்றும் பிற மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவு

கடந்த 12ந் திகதி (வெள்ளிக்கிழமை) அன்று பொலிஸ் மா அதிபர் C. D. விக்ரமரத்ன, கண்டி எல்லையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அலஹகோன் உட்பட ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமாகக் கூறப்படும் அமா திஸாநாயக்க ஆகியோருக்கு மனு அனுப்புவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இப்பயிற்சியின் போது இலங்கையில் உள்ள தன்பாலீர்ப்பின பெண்கள்,  தன்பாலீர்ப்பின ஆண்கள்,  ஈர்பாலீர்ப்பினர்கள்,  திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்கள்/வினவினர் (LGBTIQ) சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையிலும் பாகுபாடு காட்டும் வண்ணமும், கண்டி மற்றும் மாத்தளை பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள், …

Colombo PRIDE 2021 க்காக மென்மேலும் இணையும் கூட்டாளர்களை EQUAL GROUND வரவேற்கிறது

எங்கள் சமீபத்திய கூட்டாளர்களான Sunila Women and Children Development Foundation (Polonnaruwa), Young Out Here, Youth Voices Count, Rotaract Club of Colombo East, Australian High Commission in Sri Lanka, ஆகியவற்றை கொழும்பு PRIDE 2021க்காக EQUAL GROUND வரவேற்கிறது. “Sunila Women and Children Development Foundation ஆனது LGBTIQ சமூகத்தின் உரிமைகளுக்காக வாதிடும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைவதுடன் பன்முகத்தன்மைகளின் அடையாளங்களையும் கொண்டாடுகிறது.  இலங்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய எங்கள் சேவையை நல்கும் …

Colombo PRIDE 2021 க்காக EQUAL GROUND அமைப்பானது Selyn, Brunch,Yellow Dot and Pulse உடன் இணைகிறது.

இந்த ஆண்டும்மாற்றமில்லாமல் Colombo PRIDE தொடர்ந்து வலிமையுடன் வளர்ந்த வண்ணம் இருக்கிறது, COVID-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்கள் பல இருந்தபோதிலும், எங்கள் LGBTIQ உரிமைக்கான அமைப்புகள் மற்றும் எமக்கு ஆதரவான கூட்டாளிகளின் வலையமைப்பு வளர்ந்த வண்ணம் இருக்கிறது.  கொழும்பு PRIDE 2021 இல் சமீபத்திய சேர்த்தல்களாவன: Selyn (உள்ளூர் வணிக கூட்டாளர்),  Yellow Dot (சமூக ஊடக கூட்டாளர்), Pulse (ஆன்லைன் ஊடக கூட்டாளர்) மற்றும் Brunch (டிஜிட்டல் மீடியா கூட்டாளர்) ஆகும். இலங்கையில் LGBTIQ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், படிப்பிப்பதற்கும், ஆதரிப்பதற்கும் Selyn’s PIN …

“தேதுனு சவிய” – இலங்கையின் ஒரே ஒரு LGBTIQ தோழமைத் தொழில் தளம்

இலங்கையின் சட்டபூர்வமான நிலவரம் மற்றும் சமூக களங்கங்கள் காரணமாக, தன்பாலீர்ப்பின பெண்கள் , தன்பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் வினாவினர்/விந்தையர் (LGBTIQ) சமூகம் தினந்தோறும் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக LGBTIQ சமூக தனிநபர்கள் வேலைவாய்ப்பைத் தேடித் திரிவதையும் அதனை  தக்கவைத்துக்கொள்வதையும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக எதிர்கொள்கின்றனர்.  இதன் விளைவாக அவர்கள் பணியிடங்களில் அதிக அளவு துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மற்றும் / அல்லது பதவி உயர்வு மறுக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் …

பிரதிப்பெயர்களை சரியாகப் பாவிப்பதன் முக்கியத்துவம்

#PronounsMatter பிரதிப்பெயர்கள் என்பவை நாம் எவ்வாறு மற்றவர்களை குறிப்பிடுகிறோம் என்பதில் அடங்கியுள்ளது.  இலங்கையிலும், உலகிலுள்ள ஏனைய பகுதிகளிலும் பிரதிபெயர்களின் பாவனை யாவும் பாலினத்தை மையமாக கொண்டே அமைந்துள்ளது.  நாம் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பிரதிபெயர்களாவன அவள்/ அவளுக்கு/அவளுடைய மற்றும் அவன்/அவனுக்கு/அவனுடைய, ஆகியன அவரவரது பாலினத்தைக் குறிக்கும் சொற்களாகும். இவை பொதுவாக பொதுபாலின (தங்களது தனிப்பட்ட பாலின அடையாளமும் பாலின உணர்வும் பிறப்பின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் ஒத்திருப்பதாக நினைக்கும் நபர்கள்) நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.   எப்படியாயினும் தற்போதய நிலவரப்படி பாலினத்தை மையமாகக் கொள்ளாமலேயே பிரதிப்பெயர்கள் பாவிக்கப்படுகின்றன.  …

சமத்துவத்திற்கான நண்பர்

அனைத்து நண்பர்களின் குரல்களும் தன்பாலீர்ப்பின பெண்கள், தன்பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் வினாவினர்/புதுமையினர் ஆகிய அனைவருக்கும் மிகவும் பயனுள்ள மற்றும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கின்றன.  அவர்கள் எங்கள் உடன்பிறப்புகள், எங்கள் பெற்றோர், உறவினர்கள், எங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், சக ஊழியர்கள் மேலும் பலர். இருப்பினும், LGBTIQ அல்லாத நபர்கள் மட்டுமல்ல, LGBTIQ நபர்களும் கூட தங்களது சக சமூக உறுப்பினர்களுக்காக ஒரு கூட்டாளியாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியமாகும். ஒரு நல்ல நண்பன் என்பவர் பெரும்பான்மையினரின் சலுகைகளை …