நாம் யார்?


ஓரின பால் ஈர்ப்பு பெண்கள், ஓரின பால் ஈர்ப்பு ஆண்கள், இருபால் உறவாளர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள், இடையிலிங்கத்தவர்கள், பால் புதுமையர்கள் (LGBTIQ) சமூகத்தினரின் சம உரிமைகளுக்காக தற்போது தீவிரமாக போராடும் இலங்கையில் உள்ள ஒரே அமைப்பு EQUAL GROUND ஆகும்.

2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட EQUAL GROUND, நாட்டில் இவ்வகையான செயல்பாட்டின் பழமை வாய்ந்த ஒரு அமைப்பாகும்.

EQUAL GROUND என்பது ஓரின பால் ஈர்ப்பு நடவடிக்கைகளை மறுதலிப்பதற்கும், தனிநபர்களின் பால் நாட்டம் அல்லது பால் நிலை அடையாளம்/வெளிப்பாடு/பண்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டை நீக்குவதற்கும் பரிந்துரைக்கிறது.