Colombo PRIDE 2021 க்காக EQUAL GROUND அமைப்பானது Selyn, Brunch,Yellow Dot and Pulse உடன் இணைகிறது.

இந்த ஆண்டும்மாற்றமில்லாமல் Colombo PRIDE தொடர்ந்து வலிமையுடன் வளர்ந்த வண்ணம் இருக்கிறது, COVID-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்கள் பல இருந்தபோதிலும், எங்கள் LGBTIQ உரிமைக்கான அமைப்புகள் மற்றும் எமக்கு ஆதரவான கூட்டாளிகளின் வலையமைப்பு வளர்ந்த வண்ணம் இருக்கிறது.  கொழும்பு PRIDE 2021 இல் சமீபத்திய சேர்த்தல்களாவன: Selyn (உள்ளூர் வணிக கூட்டாளர்)Yellow Dot (சமூக ஊடக கூட்டாளர்), Pulse (ஆன்லைன் ஊடக கூட்டாளர்) மற்றும் Brunch (டிஜிட்டல் மீடியா கூட்டாளர்) ஆகும்.

இலங்கையில் LGBTIQ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், படிப்பிப்பதற்கும், ஆதரிப்பதற்கும் Selyn’s PIN IT WITH PRIDE கூட்டாண்மை தொடங்கப்பட்டுள்ளது.  EQUAL GROUND உடன் ஒத்துழைப்பதுடன், Selyn ல் உள்ள ஊழியர்களுக்கு எங்கள் பன்முகத்தன்மை மற்றும் சேர்த்தல் (இடங்கொடுத்தல்) (D&I) திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுவதை உறுதி செய்வதுடன் எங்கள் துணை வலுகொடுத்தல் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவும் அளிக்கிறது.

டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் மீடியா கூட்டாளர்களாக இருப்பதினால், Brunch மற்றும் Pulse ஆகியவை கொழும்பு PRIDE 2021 க்கு கட்டுரைகள், காணொளிகள் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கங்களுடன் கூடிய ஊடகத் தெரிவுநிலையை வழங்குகிறது. இலங்கையின் அனைத்து மூலைகளிலும் சென்று எங்கள் செய்தியை எல்லா பொதுமக்களிடமும் கொண்டு பரப்பவும் Colombo PRIDE 2021 இன் உணர்வை ஊக்குவிக்கவும் இது ஒரு மிகவும் சிறந்த வழியாகும்.

சமத்துவம், உள்ளடக்கம், நல்லிணக்கம் மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட Yellow Dot ஆனது, விழிப்புணர்வு, அதிகாரமளித்தல் மற்றும் வாதிடுதல் ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுவினரின் பாதுகாப்பிற்காகப் பாடுபடுகின்றது.  PRIDE ஐப் பொறுத்தவரை, இந்த அமைப்பு வாராந்திர podcasts உடன் பால் புதுமையர் மற்றும் செயல் உரையாடல்களும் நடத்துவார்கள்.

“இலங்கையில் LGBTIQ+ உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தலைக் குறித்தும் நாங்கள் நீண்ட தூரம் வந்துள்ளோம், ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது!  தொழில் கூட்டாண்மையானது, குறிப்பாக கிராமப்புறங்களில் மற்றும் நகர் புறங்களுக்கு வெளியே பணிபுரியும் கூட்டாளர்களுடன் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வையும் படிப்பினையையும் பரப்புவதற்கு உகந்த ஒரு சிறந்த வழியாகும்.  ஆகவே, Selyn PRIDE க்காக எங்களுடன் கைகோர்த்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், அதன்பிறகு அவர்களின் பணியிடத்தில் பன்முகத்தன்மையையும் சேர்த்தலையும் (இடங்கொடுத்தல்) ஊக்குவிப்போம்! ” EQUAL GROUND நிர்வாக இயக்குனர், Rosanna Flamer-Caldera அவர்கள் கூறினார்.

அத்துடன், LGBTIQ சமூகத்தினரது உரிமைகள் குறித்து பொது மக்களை உணர்த்துவதிலும் படிப்பிப்பதிலும் ஊடகங்கள் வகிக்கும் பங்கை மிகைப்படுத்த முடியாது.  அனைத்து இலங்கையர்களுக்கும் எங்கள் செய்தியைப் பரப்புவதற்கு ஊடகங்கள் எங்கள் வலுவான கூட்டாளர்களில் ஒன்றாக திகழ்கின்றது.  எனவே, டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் ஊடக பங்காளிகளாக Brunch மற்றும் Pulse இணைந்ததைக்குறித்து நாங்கள் மிகவும் நன்றிக் கூற கடமைப்பட்டிருக்கிறோம்.”

“சமூக ஊடகங்கள் மற்றொரு முக்கியமான ஊடகம் மற்றும் LGBTIQ உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இளைஞர் ஆர்வலர்களுக்கு ஒரு முக்கிய இடமாக அமைகிறது.  எனவே, Yellow Dot அமைப்பு எங்களுடன் ஒத்துழைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் ஒன்றிணைந்து, Colombo PRIDE 2021 ஐ வெகு வெற்றியாக மாற்ற முடியும்! ” என்றும் கூறினார்.

Colombo PRIDE 2021 க்கான எங்கள் வளர்ந்து வரும் ஒத்துழைப்புகளின் பட்டியலில் நீங்களும் சேர விரும்பினால், தயவுசெய்து எங்களுக்கு media@equalgroundsrilanka.com மின்னஞ்சல் அனுப்புங்கள்.

மறுமொழி இடவும்