நாங்கள் சேவை செய்யும் இடங்கள்


2004 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த 15 ஆண்டுகளில், EQUAL GROUND இலங்கையில் 50 க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் உணர்திறன் மற்றும் படிப்பினைகளை கீழ்காணும் பகுதிகளுக்கு பணியாற்றியுள்ளது, அக்குரெஸ்ஸ, அனுராதபுரம், அம்பாறை, அற்றாளைச்சேனை, அரநாயக்க, பத்தகம, மட்டக்களப்பு, பலாங்கொடை, பெந்தொட்ட, பேருவள, கொழும்பு, தம்புல்ல, தாதெல்ல, ஈச்சலம்பத்து, காலி, ஹட்டன், ஹபரண, ஹிக்கடுவ, யாழ்ப்பாணம், களுத்தர, கம்புறுபிட்டிய, காத்தான்குடி, கல்லடி, கபதிகொல்லாவ, கந்தளாய், களனிய, கேகாலை, கண்டி, குருவிட்ட, கிளிவெட்டி, லிங்கபுரம், மத்துகம, மாத்தறை, மீப்பிரிமான, மொறட்டுவ, மதவாச்சிய, மாவனெல்ல, முந்தளம், நீர்கொழும்பு, நுவரெலிய, ஓட்டமாவடி, பாணந்துறை, பிலியந்தலை,புத்தளம், பேராதெனிய, பொலன்னறுவ, ரம்புக்கன, ரத்னபுரம், சர்த்தாபுரம், தங்கல்லை, திஹகொட, தலவக்கலே, தவலந்தென்ன, திருகோணமலை, உப்புவெலி, வஜித்தபுர, வனாதத்வில்லு, வாழைச்சேனை, வல்கம, வரக்கப்பொலா மற்றும் யால ஆகும்.

கொழும்பு PRIDE


இலங்கை LGBTIQ நாட்காட்டியில் ஒரு முக்கிய நிகழ்வாக, EQUAL GROUND ஆண்டுதோறும் PRIDE கொண்டாட்டங்களை 2005ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இலங்கையில் PRIDE தற்போது ஒரு சிறிய அளவில் உள்ளது, அதே நேரத்தில் எங்கள் உரிமைகளை கோரி ஒரு நாள் வீதிகளில் பகிரங்கமாக அணிவகுத்துச் செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் LGBTIQ நபர்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்கள், அமைதியான அணிவகுப்புக்கு தடையாக உள்ளது. எனவே, PRIDE கொண்டாட்டங்கள் இலங்கை முழுவதிலும் உள்ள நபர்கள் கலந்துகொள்ளும் தனிப்பட்ட மற்றும் பொது நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன.

PRIDE வலிமையிலிருந்து வலிமைக்கு வளர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பால் புதுமை அனைத்து சமூகத்தினரும் வெளியே வந்து பெருமை கொண்டு ஊக்குவிப்பதற்காக பல்வேறு வகையான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இது ஒரு படிப்பினை மற்றும் உணர்திறன் பயிற்சியாகும், அங்கு பன்முகத்தன்மை பற்றிய செய்தி ஒரு முழுமையான முறையில் உரையாற்றப்படுகிறது, இது இலங்கை பெரும்பான்மை குடியுரிமையால் பால் புதுமை அனைத்து சமூகத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகுக்கிறது. இந் நிகழ்வுகளில் பட்டறைகள், நாடகங்கள் / திரைப்படங்கள் / இசை நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சித்திரகலை மற்றும் புகைப்பட கண்காட்சிகள், விருந்துபசாரங்கள், காத்தாடி விழா மற்றும் இன்னும் பல உள்ளன. கொழும்பு PRIDE இன் ஒருங்கிணைந்த பகுதியாக அபிமானி க்குயர் திரைப்பட விழா உள்ளது, இது கொழும்பு PRIDE உடன் இணைந்து, அதன் 15 வது ஆண்டு விழாவை 2019 இல் கொண்டாடியது.

ஆலோசனை


LGBTIQ நபர்களுக்கான எங்கள் ஆலோசனை சேவையானது 2005 இல் தொடங்கப்பட்டது. நாங்கள் தற்போது மும் மொழிகளில் (ஆங்கிலம், சிங்கள மற்றும் தமிழ்) ஒரு ஹெல்ப்லைனை இயக்குகிறோம், இதில் பெண்களுக்கு, LB பெண்கள் மட்டும் அத்துடன் பால் மாற்றினருக்கு பால் மாற்று நபர்கள் அலைகள் ஆகியவை உள்ளன. இது எங்கள் சேவையிலுள்ள ஊழியர்களால் இயக்கப்படுகிறது.

முகநூல் மற்றும் எங்கள் ஆலோசனைப் பக்கத்தின் மூலம் நாங்கள் இணையத்தள ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.  முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள எங்களின் அனைத்து கணக்குகளிலும் இச்ச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

பாதுகாப்பான இடம்


EQUAL GROUND அலுவலகமானது கொழும்பு LGBTIQ சமூகத்துக்கு பாதுகாப்பான இடமாக செயல்படுகிறது, இது மேலதிக பாடத்திட்ட செயற்பாடுகள், பட்டறைகள், திரைப்பட இரவுகள், பிறர்பால் உ டையணிபவர்கள், இனிய மாலைவேலைகள் மற்றும் தீம் இரவுகள், இன்னும் பல கலை அம்சங்களை உள்ளடங்கிய சமூக சேவையுடன் செயலாற்றுகின்றது.

வெளியீடுகள் (மும்மொழி)


எங்களது முயற்சிகளுக்கும் துணை வலிமை கொடுத்தலுக்கும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக கல்வி சாதனங்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் வெளியீடுகள் உள்ளது. எங்களது சமீபத்திய வெளியீடுகளை வாசிப்பதற்கு இணைய தளங்கள் பக்கத்தைப் பார்க்கவும்.

நினைவு பிரச்சாரங்கள்


  • சர்வதேச மகளிர் தினம்
  • ஓர்பாலீர்ப்பின, ஈர்பாலீர்ப்பின, மற்றும் மாற்றுப்பாலின/திருநர் வெறுப்புக்கு எதிரான சர்வதேச நாள் (IDAHOBIT).
  • மருவிய பாலின நபர்களின் / திருநர் நினைவு தினம்
  • மருவிய பாலின நபர்களின் / திருநர் கண்ணோட்ட தினம்
  • ஓர்பாலீர்ப்பின பெண்களின் கண்ணோட்ட தினம்
  • இலங்கை ஓர்பாலீர்ப்பின பெண்களின் கண்ணோட்ட தினம்
  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள் (16 நாட்களின் செயற்பாடுகள்)
  • உலக எய்ட்ஸ் தினம்
  • மனித உரிமைகள் தினம்

மேற்கூறியவை, நீண்ட காலப் பட்டியல் மூலம் கடைபிடிக்கப்பட்ட ஒரு சில நினைவு தினங்கள் ஆகும்.  EQUAL GROUND இந்த தேதிகளை நினைவுகூரும் வகையில், விளம்பர பிரச்சாரங்கள், நிகழ்வுகள், சுவரொட்டிகள் மற்றும் ஸ்டிக்கர்கள் மூலம் பிரச்சாரங்கள் மற்றும் விவாத மன்றங்களை நடாத்தி வருகின்றது.

இலங்கை பெருநிறுவனங்களுடன் ஈடுபடல் (உணர்திறன் நிகழ்ச்சிகள்)


இலங்கை பெருநிறுவனங்கள் இந்த நாட்டில் LGBTIQ சமூகத்தை ஏற்றுக்கொண்டு அரவணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. LGBTIQ பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் எதிர்நோக்கும் களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவற்றின் மீது பெருநிறுவனங்கள் சமூகத்தை உணர வைத்து பணியிடத்தில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் LGBTIQ பணியாளர்கள் தொடர்பான பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. நாங்கள் John Keells Holdings மற்றும் அவர்களின் பல நிறுவனங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் உள்ள பல ஆயிரம் பணியாளர்களை உணர்வுத்திறனுடன் உத்வேகப்படுத்தியுள்ளோம் அத்துடன் அந்நிறுவனங்கள்  தொழிலாளர் பாதுகாப்பான SOGIESC உள்ளடக்கிய மனித வளக் கொள்கைகளையும் மாற்றியுள்ளது.

மொத்தத்தில், நவம்பர் 2023 மதிப்பின்படி, EQUAL GROUND 50 க்கும் மேற்பட்டவர்களை உணர்திறன் செய்துள்ளது. இதனை எங்கள் வெற்றியாகக் கருதுகிறோம்.

ஊடக உணர்திறன் நிகழ்ச்சிகள்

சமத்துவத்துக்கான எங்கள் தற்போதைய பிரச்சாரத்தில் ஊடகங்களைப் பட்டியலிடுவதற்காக, 2015 ஆம் ஆண்டில் உள்ளூர் ஊடகங்களுக்கான பல உணர்திறன் பட்டறைகளை ஒருங்கிணைக்க EQUAL GROUND இலங்கை பத்திரிகை நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றியது. 2017 மற்றும் தற்போது வரை, EQUAL GROUND ஆண்டுதோறும் பல பட்டறைகளை நடத்தி LGBTIQ நபர்கள் மற்றும் சமூகம் குறித்த பொருத்தமான, விவேகமான மற்றும் உண்மை அறிக்கையிடலில் ஊடகங்களை உணர்த்தி தொடர்ந்தும் அவ்வாறு செய்தும் வருகிறது.

கிராமப்புற CBO க்கள், LGBTIQ ஆதரவு குழுக்கள் மற்றும் தனிப்பட்ட LGBTIQ ஆர்வலர்களின் தொழில்நுட்ப திறங்களை மேம்படுத்துதல்


EQUAL GROUND, தங்களுடன் பணிபுரியும் பல குழுக்களை மற்றும் தனிநபர்களின் திறன்களை தொடர்ந்தும் மேம்படுத்திக் கொண்டேவருகிறது. இதில் கிராமப்புறங்களில் உள்ள CBO க்களையும், LGBTIQ ஆதரவு குழுக்கள் மற்றும் தனிநபர்களையும் அத்துடன் பிற சிறிய கிராமப்புற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதில் உள்ளடக்கப்படும். எங்களது பயிற்சிகளில் உள்ளடங்குபவை: பாலினம் மற்றும் ஆணாதிக்கம், பாலின அடிப்படையிலான வன்முறைகள், பாலியல், மனித உரிமைகள், எச்.ஐ.வி / எய்ட்ஸ் தடுப்பு முறைகள், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், ஆலோசனை, திட்ட மேலாண்மை போன்றவைகளுடன் இன்னும் வேறு சிலவும் அடங்குகின்றன. மேலும், பிராந்திய ரீதியில் ஓர்பால் ஈர்ப்பின , ஈர்ப்பால் ஈர்ப்பின பெண்களின் நிறுவன மற்றும் தனிநபர்கள் திறங்களை மேம்படுத்துவதை EQUAL GROUND உறுதியாக நம்புகிறது. அத்துடன் பல்வேறு வகையான பயிற்சி திட்டங்கள், பாதுகாப்பு நிறுவன மேலாண்மை, யோககர்த்தா கோட்பாடுகளை துணை வலிமை கொடுத்து பணிகளில் பயன்படுத்துதல், பாலினம் மற்றும் தலைமைத்துவம், ஓரின பால் ஈர்ப்பு அச்ச வன்முறை மற்றும் வெறுக்கத்தக்க குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பயிற்சிகளை நடத்தியுள்ளது.

வீடியோ ஆவணப்படங்கள்


EQUAL GROUND ஆனது PRIDE 2006 உட்பட Heavens Trauma (சுனாமி - 2006) மற்றும் Repeal Section 365A (2011) போன்ற பல துணை வலிமை கொடுத்தல் ஆவணப்படங்களை தயாரித்துள்ளது. மேலும் முழுமையாக நீண்ட ஆவணப்படங்களில் ஹேவ் ட்ரீம் (2008), ரெயின்போ ரன்வே (2010), தி ஆண்டி நெட்டா ஷோ (2011), ரெயின்போ ரன்வே (2013) மற்றும் இன்விசிபல் ஸ்டேய்ன் (2015) ஆகியவை அடங்கும். மேலும், 2015 ஆம் ஆண்டில் கொழும்பு PRIDE க்காக EQUAL GROUND மியூசிக் வீடியோவை “Nothing but PRIDE” என்ற தலைப்பில் உருவாக்கி, இலங்கை மற்றும் சர்வதேச பார்வையாளர்களிடையே மகத்தான வெற்றியையும் பெற்றது. EQUAL GROUND அதன் துணை வலிமை கொடுத்தல் ஆவணப்படத்தின் திறனை விரிவுபடுத்தி அதன் காட்சிக்கு துணை வலிமை கொடுத்தலின் மூலம் உணர்திறனைக் கொண்டுவருவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

இளைஞர் வலையமைப்பு


EQUAL GROUND இளைஞர் வலையமைப்பானது இலங்கையின் பொது இளைஞர்களுடன் குறிப்பாக மனித உரிமைகளை மையமாகக் கொண்டவர்களுடன் வலையமைப்புச் செய்வதையும் LGBTIQ இளைஞர்களின் பிரச்சினைகளை பிரதான வழியில் கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாற்று பாலினத்தவர் திட்டம்


மாற்று பாலினத்தவர் திட்டம் 2012 இல் ஒரு மேம்பட்ட திட்டத்தை உள்ளடக்கியது, இதில் கள சந்திப்புகள், சமூக கூட்டங்கள், எச்.ஐ.வி மற்றும் எஸ்.டி.ஐ பட்டறைகள், பாலினம் மற்றும் பாலியல் பட்டறைகள், மாற்று பாலினத்தவர் கூட்டுறவு, எஸ்.ஆர்.எஸ் உடனும் சுகாதாரம் மற்றும் மாற்று பாலினத்தவர் வலையமைப்பு பற்றியும் கவனம் செலுத்தி கலந்தாலோசிக்கப்பட்டது. இவை அனைத்தும் மாற்று பாலினத்தவர் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவைகலாகவேயிருந்தன. மாற்று பாலினத்தவர்களுக்காகவே தனியே ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனை அலையும் வடிவமைக்கப்பட்டது.

LB பெண்களின் உதவித்தொகை


2013 முதல், EQUAL GROUND சலுகை பெற்ற ஓரின பால் ஈர்ப்பு / ஈரின பால் ஈர்ப்பு பெண்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. தையல், தூபக் குச்சி தயாரித்தல், அழகு கலாச்சாரம், புகைப்படம் எடுத்தல் மற்றும் சமையல் கலை போன்ற பல்வேறு துறைகளில் அனுராதபுரம், புத்தளம், நுவரெலியா, காலி மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்து 25 பெண்கள் பயனடைந்துள்ளனர்.

FFLGBTIQ


LGBTIQ நபர்களின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பொருத்தமான சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதற்கும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும் ஒரு சூழலை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் இச்செயல்பாட்டின் மூலம் LGBTIQ உரிமைகள் இயக்கத்தை மேலும் மேம்படுத்தி பங்களிக்கும் வலுவான கூட்டாளர்களின் வலையமைப்பையும் உருவாக்கி, அரசியலமைப்பின் கீழ் பாதுகாப்பை அதிகரிக்க வழக்குகளை ஊக்குவித்து LGBTIQ நபர்களை முறையாக ஓரங்கட்டும் பாரபட்சமான சட்டங்களை ரத்து செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இதற்காக பல நிகழ்வுகள் தொடங்கப்பட்டுள்ளன, குறிப்பாக PRIDE நிகழ்வுகளில் இதற்கென்றே ஒரு வலுவான தளம் கூட நிறுவப்பட்டுள்ளது.

இணையவலைத்தளம் மற்றும் சமூக வலைப்பின்னல்கள்


EQUAL GROUND அதன் இணையவலைத்தளத்தின் மூலம் இலகுவாக அணுகக்கூடியதும் மற்றும் கண்ணுக்கு புலப்படும் வகையிலும் இருக்கிறது. EQUAL

GROUND blog  மற்றும் EQUAL GROUND வலைப்பதிவு கள் பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் அத்துடன் இன்ஸ்டாகிராமில் அதன் சுயவிவரத்துடன் இருக்கிறது.   Live with Love பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ட்ரைபலில் கிடைக்கின்றன.

சர்வதேச துணை வலுகொடுத்தல்


எங்கள் துணை வலுகொடுத்தல் வேலையானது தேசிய மற்றும் உலகளாவிய ரீதியுள்ளது. .நா மட்டத்தில், 2008 முதல் UPR, CEDAW, ICCPR, CRC, ICESCR ஆகியவற்றிற்கு நிழல் அறிக்கைகளை தொடர்ந்து சமர்ப்பித்துள்ளோம்.

சர்வதேச ஓர்பாலீர்ப்பின பெண்கள்/ஆண்கள், ஈர்பாலீர்ப்பினர்கள், மருவிய பாலினத்தவர்கள் (திருநர்), இடைப்பால்/ஊடுபால் சங்கத்தின் (ILGA) நிர்வாகக் குழுவில் 2004 முதல் 2014 வரை பிராந்திய பிரதிநிதி மற்றும் இணை பொதுச்செயலாளர் பதவிகளில் EQUAL GROUND இலங்கைக்காக பிரதிநிதித்துவம் வகித்தது.

EQUAL GROUND என்பது The Commonwealth Equality Network (TCEN)  இன் நிறுவன உறுப்பாகும்எங்கள் நிர்வாக இயக்குநர் இந்த அமைப்பின் முதல் தலைவராக இருந்தார் (2015-2021).  Common Wealth சமத்துவ வலையமைப்பு என்பது Common Wealth சிவில் சமூக அமைப்புகளின் ஒரு பிணையமாகும், இது பாலியல் நாட்டம் மற்றும் பாலின அடையாளத்தின் அடிப்படையில் பொது நல சமத்துவமின்மையை சவால் செய்ய வேலை செய்கிறது. Common Wealth முழுவதிலும் உள்ள LGBTIQ சமூகங்களுக்கு குரல் கொடுப்பது மற்றும் பொதுநல பிரச்சினைக்கு ஒரு பொதுவான தீர்வை அடையாளம் காண்பதில் துணை வலுகொடுத்தலுக்கு கூட்டு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இந்த வலையமைப்பு அமைக்கப்பட்டது. Common Wealth நிறுவனத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரே LGBTIQ வலையமைப்பு / நிறுவனம் TCEN ஆகும்.

EQUAL GROUND ஆனது RFSU/SIDA தென் ஆசியா LGBT நெட்வ்ர்க் உடனும் ஒரு இணைப்பு வலையமைப்பு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்கள் கொண்ட பங்களாதேஷ், பாக்கிஸ்தான், இந்தியா, நேபால் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஓரின பால் ஈர்ப்பு பெண்கள், ஓரின பால் ஈர்ப்பு ஆண்கள், இருபால் உறவாளர்கள், மாற்றுப்பாலினத்தவர்கள் (LGBT) இன் உரிமைகளையும் சுகாதாரத்தையும் (எச்..வி உட்பட) மேம்படுத்தி 2007 லிருந்து 2012 வரை தென் ஆசியாவில் ஒரு இன்றியமையா பங்காக இயங்கியது.

I4C க்கான தெற்காசியா மையத்தின் குழுவில் EQUAL GROUND வும் ஒன்றாக இருந்தது. மாற்றத்திற்கான கண்டுபிடிப்பு (I4C) என்பது மக்கள் மற்றும் அமைப்புகளின் உலகளாவிய வலையமைப்பாகும், அவை குடிமை இடத்தைப் பாதுகாக்கவும், சட்டசபை, சங்கம் மற்றும் பேச்சுக்கான நமது அடிப்படை சுதந்திரங்களுக்கான கட்டுப்பாடுகளை முறியடிக்கவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனவாகும்.

சஹரா-க்கு இலங்கைக்கான நாட்டின் ஒருங்கிணைப்பாளரை EQUAL GROUND முன்னின்று நடத்தியது. சஹ்ரா (தெற்காசிய மனித உரிமைகள் சங்கம் அவர்களின் பாலியல் மற்றும் பாலின அடையாளம் / வெளிப்பாடு காரணமாக ஓரங்கட்டப்பட்ட மக்கள்) என்பது தெற்காசிய பிராந்தியத்தில் பாலியல் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை முறையாக ஆவணப்படுத்தவும், இந்த மீறல்களுக்கு பதிலளிக்கவும் மற்றும் மனித உரிமைகளை அங்கீகரித்து, பாதுகாத்து அத்துடன் மேம்படுத்துதல் ஆகியவற்றில் வலுவாக வாதிட்டு செயல்படுத்துகிறது.

(2008-2010) . ச்சிகாகோவின் ஹார்ட்லேண்ட் அலையன்ஸ் ஆதரவின் கீழ் உலகளாவிய சமத்துவ வலையமைப்பின் ஒருங்கிணைந்த உறுப்பினராக EQUAL GROUND இருந்தது.

உள்ளூர் வழிமுறைகளுடன் ஈடுபாடு

2016 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சீர்திருத்த செயல்முறைக்கு பங்களிப்பதன் மூலம் LGBTIQ உரிமைகளுக்கான துணை வலுகொடுத்தலாக EQUAL GROUND தனது பங்கைக் கொண்டிருந்தது மற்றும் 9 மாவட்டங்களில் PRC விளக்கக்காட்சிகளில் குறிப்பிடத்தக்க இடத்தைக்கொண்டிருந்தது. எமது அமைப்பு அடிப்படை உரிமைகளுக்கான பாராளுமன்ற துணைக்குழுவை (2017) சந்தித்து, இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சேர்ப்பதற்கான பரப்புரைகளை மேற்கொள்ளும் போது, ​​பாகுபாடு காட்டாத கொள்கைகள் மற்றும் நியாயப்படுத்தலை உள்ளடக்கியதன் அவசியம் குறித்து தனது விளக்கக்காட்சியை வழங்கியது. நல்லிணக்க வழிமுறைகளுக்கான சிறப்பு பணிக்குழுவில் விளக்கக்காட்சிகள் மற்றும் சமர்ப்பிப்புகள் செய்யப்பட்டு, தேசிய மனித உரிமைகள் செயல் திட்டத்திற்கு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இலங்கையின் மனித உரிமைகள் ஆணையத்துடன் (HRCSL) துணைக் குழு உறுப்பினராக நாங்கள் ஈடுபட்டிருப்பது விரிவானதொன்றாகும். வழக்குகளின் ஆவணங்கள் HRCSL க்கு வழங்கப்பட்டன, மாற்றுப்பாலினத்தவர்களுக்கான பாலின சான்றிதழ் வளங்கள் செயல்பாட்டில் எம்து உள்ளீடும் சேர்க்கப்பட்டு இலங்கை தீவு முழுவதும் EQUAL GROUND, HRC அதிகாரிகளுக்கு உணர்திறன் கொண்ட SOGIE விவரித்தது.

 

இலங்கையின் சட்ட உதவி ஆணையத்துடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றினோம், ஊழியர்களுடன் உணர்திறன் திட்டங்களை நடத்தினோம், வழக்கறிஞர்கள் பயிற்சிகள் மற்றும் ஒரு வழக்கறிஞர் மாநாட்டை கூட நடத்தினோம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள LGBTIQ நபர்களுக்கு சிறந்த உதவியாக வக்கீல்கள் கூட்டுகளைத் தொடங்கி வைத்தோம்.

EQUAL GROUND முக்கிய வழக்கறிஞர்கள், தன்னார்வ தொண்டுத் தலைவர்கள் போன்றோரின் ஆலோசனைக் குழுவை நிறுவியதுடன், பேராதெனிய பல்கலை கழக உளவியல் துறை, களனிய ஊடக ஆய்வுத் துறை மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சமூகவியல் துறை ஆகியவற்றுடன் விரிவாக பணியாற்றியுள்ளோம். உணர்திறன் பட்டறைகள், இளைஞர் முகாம்கள், ஆவணங்கள் பயிற்சிகள், பொலிஸ் பயிற்சிகள், செவிலியர்கள் பயிற்சிகள் மற்றும் கண்டி STD கிளினிக்கில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளோம். மாற்று பாலின நபர்கள் சார்பாக முக்கிய உளவியலாளர்கள், உட்சுரப்பியல் நிபுணர்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் பணியாற்றியுள்ளோம்.

EQUAL GROUND இன் வழக்குகள்

2018 இல் EQUAL GROUND இன் நிர்வாக இயக்குநர் Rosanna Flamer-Caldera முக்கியப் பங்கு வகிக்கிறார்.  இலங்கையில் உள்ள பெண்களுக்கு இடையிலான வயதுவந்த ஒரே பாலின  உறவுகளை ஒப்புக்கொள்வதை பாரபட்சமான சட்டங்கள் குற்றமாக்குகிறது.  இதனை  சவால் செய்து ஐக்கிய நாடுகள் சபையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு (CEDAW) குழு, அனைத்து வகையான ஓரங்கட்டலை நீக்குவதற்கான மாநாட்டில் இதுபோன்ற முதல் வழக்கை தாக்கல் செய்த பெருமைக்குரியவர் ஆவார்.

இந்த தீர்மானத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குதல் மாநாடு குழு (CEDAW கமிட்டி) இலங்கையின் சட்டம் தன்பாலீர்ப்பினத்தை குற்றமாக கருதுகிறது என்று கண்டறிந்தது.  தன்பாலீர்ப்பின

செப்டம்பர் 2021 இல், EQUAL GROUND மற்றொரு முதல் வகையான சட்ட வழக்கை வழிநடத்தியது. தன்பாலீர்ப்பினரின், பாகுபாட்டை ஊக்குவிப்பதற்காக இலங்கை காவல்துறைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் இலங்கை பொலிஸ் பயிற்சியாளர்களின் ஆத்திரமூட்டும் கதைகள் அடங்கி இருந்தது. இரண்டு வழக்குகளிலும் தீர்ப்பளிக்கப்பட்டது EQUAL GROUND இன் அங்க அதிகாரிகளும் அதற்கு ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளிகளை உள்ளடக்கிய வழக்குரைஞர்கள் இதற்கு ஆதரவளித்தார்கள்.  
 
ஏப்ரல் 2023 இல், EQUAL GROUND பலருடன் சேர்ந்து, இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். வயது வந்தோருக்கான பாலியல் குற்றச்சாட்டிற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம்  ஏற்று தீர்ப்பளித்தது.  இலங்கை நாடாளுமன்றம் குற்றவியல் நடவடிக்கைக்கு எதிராக சம்மதத்தை காட்டியது.

(பணியிடத்தில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் இணைத்துக்கொள்ளல் ஆகியவற்றின் உணர்திறன் நிகழ்ச்சிகள்)

இந்த நாட்டில் வாழும் LGBTIQ சமூகத்தை வரவேற்பதிலும் அரவணைப்பதிலும் இலங்கை கூட்டுத்தாபனத்திற்கு பெரும் பங்கு உள்ளது.  பிரதிபெயர்களின் சரியான பயன்பாடு, இலங்கையில் LGBTIQ மக்களை பாதிக்கும் சட்டங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள்.இந்நிரல்களில் LGBTIQ என்ற சுருக்க சொற்றொடரின் அறிமுகம் ஆகியவை அடங்கும்.  

பணியிடத்தில் உள்ள பன்முகத்தன்மை மற்றும் LGBTIQ பணியாளர்கள் தொடர்பான சிக்கல்கள்

அவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் களங்கம் மற்றும் பாகுபாடு ஆகியவை LGBTIQ நபர்கள் மற்றும் பெருநிறுவன சமூகத்தை உணர்த்தும் போது விவாதிக்கப்பட்டது. 

John Keells Holdings மற்றும் Sapphirus Lanka உடனான எங்களின் வெற்றியை இங்கே சுட்டிக் காட்ட முடியும்

பல நிறுவனங்களில் இருந்து 50,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நாடு முழுவதும் இன்றுவரை உணர்திறன்  பயிற்சி பெற்றுள்ளனர்.  மற்றும் இந்த நிறுவனங்கள் பல, LGBTIQ நபர்களுக்கான பணியிடங்களில் தங்கள் முன்னேற்ற மாற்றங்களை விளைவாக பாதுகாப்புகள் மற்றும் மிகவும் நட்புரீதியான புரிதல் மற்றும் இணைத்துக்கொள்ளல் கொள்கைகளை சேர்த்துள்ளனர்.