எங்கள் நோக்கம்


அனைத்து பாலியல் நாட்டத்திற்கும் மற்றும் பாலின அடையாளங்களுக்கும் சமத்துவம்: எல்லோருக்கும் மனித உரிமைகள்.

முக்கிய மதிப்புகள்


நம்பகத்தன்மை மற்றும் நேர்மை

நாங்கள் நேர்மையாக இருப்போம். எங்களால் செய்ய முடியாத வாக்குறுதிகளை நாங்கள் வழங்க மாட்டோம், அதே நேரம் கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் கடைப்பிடிக்க தவறவும் மாட்டோம். நாங்கள் இலங்கையின் சட்டங்களை மீறவும் மாட்டோம் அதுபோல எங்களுடன் இணைந்த எவரையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும் மாட்டோம்.

கூட்டுஉறவுகள்

எங்கள் பொதுவான நோக்கங்களை பகிர்ந்து கொள்ளும் பிற தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உதவி செய்வதற்கு நாங்கள் முயல்கிறோம்.

படைப்பாற்றல் மற்றும் புத்தி கூர்மை

அனைவருக்கும் சமத்துவம் என்ற செய்தியை பரப்புவதற்கான ஆக்கபூர்வமானதும் பயனுள்ளதுமான திறமையான வழிகளைக் கண்டறிய முயல்கிறோம்.

வெளிப்படைத்தன்மை

எங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து எங்கள் நடவடிக்கைகள் அல்லது நிதி பற்றிய தகவல்களில் நாங்கள் தவறு செய்யமாட்டோம். நாம் தவறு செய்தால், அதை நாங்கள் சுயமாகக் கொண்டு அதை சரிசெய்ய ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்.

தகவல் மற்றும் திறன்

நாங்கள் எங்கள் துறையில் நிபுணர்களாக மாறுவோம். நமது நோக்கம் யதார்த்தமாக மாறுவதைக் காண, நமது பிற மதிப்புகளுடன் சேர்ந்து, பயன்படுத்தப்பட வேண்டிய அறிவு மற்றும் நிபுணத்துவத்தை நாம் பெறுவோம்.

அணுகுமுறை

மற்றவர்களை நாம் நடத்தும் விதத்தில் அவர்களை மதிக்கிறோம். நாம் படிப்பித்ததை நாமே நடைமுறைப்படுத்துகிறோம்.

ரகசியத்தன்மை

அத்தகைய தகவல்களின் உரிமையாளர்களின் வெளிப்படையான அனுமதியின்றி தனிப்பட்ட அல்லது நிறுவன தகவல்களை நாங்கள் வெளியிட மாட்டோம்.

எங்கள் சின்னம்


EQUAL GROUND சின்னமானது ஆங்கில பெரிய எழுத்தில் நிறுவனத்தின் பெயரை உள்ளடக்கி ‘A’ எழுத்தின் வடிவில் தலைகீழ் இளஞ்சிவப்பு முக்கோணத்துடன் உள்ளது.

தலைகீழ் இளஞ்சிவப்பு முக்கோணமானது இரண்டாம் உலகப் போரின்போது நாஜி வதை முகாம்களில் தோன்றியது, அங்கு ஓரின பால் ஈர்ப்பு ஆண்கள் ‘பாலியல் விலகல்’ உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு இளஞ்சிவப்பு முக்கோணத்தை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்டோன்வாலுக்கு பிந்தைய 'ஓரின பால் ஈர்ப்பாளர்கள் உரிமைகள் இயக்கத்தில் இந்த சின்னம் அதிகாரமளிப்பதற்கான அடையாளமாகவும், சிலவற்றின் நினைவுகூரலாகவும் மீட்கப்பட்டது.

அமைப்பின் பெயரில் இடையில் இருக்கின்ற சீரான, கிடைமட்ட, இளஞ்சிவப்பு குறுக்கு வெட்டு நீள் கோடானது பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளம்/வெளிப்பாடு/பண்புகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நபர்களுக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் ஒரே நிலை செயல்பாட்டிலிருக்க வேண்டி வலியுறுத்துகிறது.

Image

எங்கள் இயக்க சுற்றுச்சூழல்


இலங்கை சமூகமானது கடுமையான பாலின தரங்கள் மற்றும் பொறுப்புகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இதில் மாறானது, வித்தியாசமானது மற்றும் இரண்டுக்குமிடையில் பாலின தரநிலைகள் அனைத்தும் அசாதாரணமான, மாறுபட்டவை என்றும் தண்டனைக்கும் பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படவேண்டியன என்றே கருதப்படுகிறது.

எங்கள் கடந்த காலத்தின் காலனித்துவத்தின் விளைவாக, சுய விருப்பத்துடன் பெரியவர்களுக்கிடையில் (வயது வந்தவர்கள்) இணையும் ஓரின பால் ஈர்ப்பாளர்கள் உறவுகளானது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒரு குற்றச் செயலாகவே கருதப்படுகிறது.

இதன் விளைவாக, சமூக பாகுபாட்டின் களங்கமானது ஓரின பால் ஈர்ப்பாளர்களுக்கும் மாற்று பாலினத்தவர்களுக்கும் புகுத்தப்பட்டது.

இந்த களங்கம் LGBTIQ சமூகத்தின் உறுப்பினர்களின் பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுதலின் விளைவாக பெருமளவில் நிறுவனமயமாக்கப்பட்டு LGBTIQ சமூகத்தின் உறுப்பினர்களாக கருதப்படுபவர்கள் அனைவரையும் பாதித்துள்ளது. இத்துடன் பாலின அடையாளம் மற்றும் பாலியல் நாட்டம் குறித்ததான போதிய அறிவு இல்லாததால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மத/கலாச்சாரக் கோட்பாட்டுக்குட்பட்டு LGBTIQ நபர்கள் பெரும்பாலும் எதிர் பாலினத் திருமணங்களுக்குத் பலாத்காரமாக தள்ளப்படுகிறார்கள், அல்லது கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள்/உட்படுத்தப்படுவார்கள், இல்லாவிடில் தங்கள் வீடுகளின் அல்லது பொது இடங்களில் முக வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.

இவ்வாறு தவறாக நடத்தபப்டும் நபர்களுக்கு நீதி மற்றும் மருத்துவ பரிகாரம் கிடைக்க அநேக நேரங்களில் மறுக்கப்படுகிறது, ஏனெனில் தங்களின் ‘வித்தியாசமான’ பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளம் பகிரங்கப்படும் என்ற அச்சமும் அத்துடன் அதிகாரிகளின் கைகளில் சிக்கி மேலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவோமோ என்ற அச்சுறுத்தலும் இருக்கிறதினால் ஐயம் ஏற்படுகின்றது.