Colombo PRIDE 2021 க்காக மென்மேலும் இணையும் கூட்டாளர்களை EQUAL GROUND வரவேற்கிறது

எங்கள் சமீபத்திய கூட்டாளர்களான Sunila Women and Children Development Foundation (Polonnaruwa), Young Out Here, Youth Voices Count, Rotaract Club of Colombo East, Australian High Commission in Sri Lanka, ஆகியவற்றை கொழும்பு PRIDE 2021க்காக EQUAL GROUND வரவேற்கிறது.

“Sunila Women and Children Development Foundation ஆனது LGBTIQ சமூகத்தின் உரிமைகளுக்காக வாதிடும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிப்பதில் மகிழ்ச்சியடைவதுடன் பன்முகத்தன்மைகளின் அடையாளங்களையும் கொண்டாடுகிறது.  இலங்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய எங்கள் சேவையை நல்கும் சமூகங்களிடையே LGBTIQ நபர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், இலங்கையில் LGBTIQ சமூகத்தின் PRIDE ஐ (பெருமிதம்) கொண்டாடுவதற்கும் நாங்கள் எப்போதும் எம்மை அர்ப்பணித்துள்ளோம்” (SWCDF).

“YOH எப்போதும் அனைத்து சமூக அமைப்புகளுடனும் அதன் ஒற்றுமையை வைத்திருக்கிறது, மேலும் இந்த கடினமான காலங்களை முன்னெப்போதையும் விட ஒன்றாக போரிடுவதற்கு நாங்கள் கைகோர்க்க வேண்டும் என்று இந்த ஆண்டின் PRIDE ஐ (பெருமிதம்) நாங்கள் நம்புகிறோம்.” (Young Out Here)

“PRIDE (பெருமிதம்) என்பது பன்முகத்தன்மையும் ஏற்றுக்கொள்ளலின் கொண்டாட்டமுமாகும். இது எங்கள் வாழ்க்கை, எங்கள் அன்பு மற்றும் எங்கள் பிரதிநிதித்துவம் எமக்கு முக்கியமானது என்பதை நினைவூட்டுகிறது. இதுவரை எட்டப்படாத மக்களை ஒன்றிணைப்பதற்கு Youth Voices Count அமைப்பானது Colombo PRIDE உடன் கூட்டு சேர்ந்துள்ளது.” (Youth Voices Count)

“The Rotaract Club of Colombo East ஒரு பாதுகாப்பான இடமாகும், பாலின அடையாளம் மற்றும் / அல்லது பாலியல் நாட்டம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்துவித மக்களையும் வரவேற்கிறது.  Rotary சகோதரத்துவத்திற்கு பால்புதுமை இளைஞர்களை பகிரங்கமாக வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது, மேலும் திறந்த தன்மை, சேர்த்தல் மற்றும் பாலின வெளிப்பாடு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இடத்தை முன்வைக்கிறது. “சுயத்திற்கு மேலான சேவை” என்ற மகிழ்ச்சியை அடையும் போது, தங்களைத் தாங்களாகவே அடையாளங் கண்டுகொள்கிறவர்களையும் தங்களை வெளிப்படுத்த விரும்புகிற அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்’  Rotaract Club of Colombo East யைப் பொறுத்தவரை, PRIDE (பெருமிதம்) என்பதை அதன் அனைத்து வண்ணங்களுடன் பால்புதுமையர்களைக் கொண்டாடுவதை விட, சேர்த்தல் என்பதைக் (இடங்கொடுத்தல்) கொண்டாடுவது, வேறுபட்டதொன்றைக் கொண்டாடுவது, பாலின வெளிப்பாட்டைக் கொண்டாடுவது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக மனிதாபிமானத்தைக் கொண்டாடுவது ஆகியவை அதிகம் இன்றியமையாததாக உள்ளது.  நாங்கள் பகிரங்கமாக பெருமிதம் கொள்கிறோம், அனைவரையும் சேர்த்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம், ஏற்றுக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம், வெளிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறோம், நல்ல நண்பர்களாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.” (Rotaract Club of Colombo East)

“பன்முகத்தன்மையும் அனைவருக்கும் ஒரே சமமான வாய்ப்பும் என்பன ஆஸ்திரேலியாவின் மதிப்புகளில் இன்றியமையாததாகும். ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தில், COVID-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியில், 2021 ஆம் ஆண்டில் PRIDE மாதத்தை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் உலகளவில் வலுவான LGBTIQ சமூகத்தை கொண்டாடுவதற்கு PRIDE மாதம் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.  இன்னும் அதிகமாக தென்படக்கூடியதாக வகையில், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சமத்துவம் கொண்ட உலகத்தை நோக்கி ஒன்றாகப் பயணிப்போம்.” (Australian High Commission in Sri Lanka)

Colombo PRIDE 2021 க்கான எங்கள் வளர்ந்து வரும் ஒத்துழைப்புகளின் பட்டியலில் நீங்களும் சேர விரும்பினால், தயவுசெய்து எங்களுக்கு media@equalgroundsrilaka.com மின்னஞ்சல் செய்யுங்கள்.

மறுமொழி இடவும்