தன்பாலீர்ப்பினர் மீதான வெறுப்பு மற்றும் பாரபட்சம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கும், அமா திஸாநாயக்கவுக்கும் எதிரான EQUAL GROUND க்கு ரிட் மனுவைத் தொடருவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

இன்று புதன்கிழமை (08 டிசம்பர் 2021),பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, கண்டி எல்லையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அழஹகோன் மற்றும் உத்தேசிக்கப்பட்ட ஆலோசகரும் பயிற்சியாளருமான அமா திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக EQUAL GROUND மற்றும் பலர் தாக்கல் செய்த மனுவைத் தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இப்பயிற்சியின் போது இலங்கையில் உள்ள தன்பாலீர்ப்பின பெண்கள்,  தன்பாலீர்ப்பின ஆண்கள்,  ஈர்பாலீர்ப்பினர்கள்,  திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்கள்/வினவினர் (LGBTIQ) சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையிலும் பாகுபாடு காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டப்பட்டார். …