“தேதுனு சவிய” – இலங்கையின் ஒரே ஒரு LGBTIQ தோழமைத் தொழில் தளம்

இலங்கையின் சட்டபூர்வமான நிலவரம் மற்றும் சமூக களங்கங்கள் காரணமாக, தன்பாலீர்ப்பின பெண்கள் , தன்பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் வினாவினர்/விந்தையர் (LGBTIQ) சமூகம் தினந்தோறும் பாகுபாட்டை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக LGBTIQ சமூக தனிநபர்கள் வேலைவாய்ப்பைத் தேடித் திரிவதையும் அதனை  தக்கவைத்துக்கொள்வதையும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக எதிர்கொள்கின்றனர்.  இதன் விளைவாக அவர்கள் பணியிடங்களில் அதிக அளவு துன்புறுத்தல் மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள் மற்றும் / அல்லது பதவி உயர்வு மறுக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சிகள் சுட்டிக் …