தன்பாலீர்ப்பினவெறுப்பு பிரசங்கத்துக்கு எதிராக பொலிஸாருக்கும் அமா திஸாநாயக்கவிற்கும் மனு தாக்கல் வழங்குமாறு EQUAL GROUND மற்றும் பிற மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவு

கடந்த 12ந் திகதி (வெள்ளிக்கிழமை) அன்று பொலிஸ் மா அதிபர் C. D. விக்ரமரத்ன, கண்டி எல்லையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அலஹகோன் உட்பட ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமாகக் கூறப்படும் அமா திஸாநாயக்க ஆகியோருக்கு மனு அனுப்புவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இப்பயிற்சியின் போது இலங்கையில் உள்ள தன்பாலீர்ப்பின பெண்கள்,  தன்பாலீர்ப்பின ஆண்கள்,  ஈர்பாலீர்ப்பினர்கள்,  திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்கள்/வினவினர் (LGBTIQ) சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையிலும் பாகுபாடு காட்டும் வண்ணமும், கண்டி மற்றும் மாத்தளை பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள், …