புகைப்படப் போட்டி
பல கலந்தாலோசனையின் பின்னர் இறுதி வெற்றியாளர்களைத் தெரிவு செய்தோம்!
போட்டிக்கான நீதிபதிகளின் தெரிவு விருது
போட்டியின் முடிவை தீர்ப்பளிப்பதற்கு 4 போட்டி நீதிபதிகள் பங்கேற்றனர். நிம்மி ஹராஸ்கமா (விருது வென்ற நடிகை), அமீனா ஹுசைன் (ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்), கேசரா ரத்னவிபூஷன (புகைப்படக் கலைஞர்) மற்றும் ரொசன்னா ஃபிளேமர்-கால்தேரா (ஈக்வல் கிரவுண்டின் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் ஆவர். இவர்கள் நால்வரும் இணைந்து மட்டக்களப்பைச் சேர்ந்த ஹபிஷாவினால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்பட எண் 54 ஐ வெற்றிபெற்ற புகைப்படமாகத் தெரிவு செய்தனர்.
நிம்மி ஹராஸ்கம
“கொழும்பு PRIDE புகைப்பட போட்டியில் தீர்ப்பளிப்பதற்கு எனக்கு வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி. எல்லா புகைப்படங்களையும் பார்வையிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இத்தகைய சிந்தனையும் விவரமும் சேர்க்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும், இலங்கையில் வாழும் மக்களினதும் தன் பால் ஈர்ப்பு நபர்களின் சமூகத்தினரினதும் திறமைகள் அனைத்தையும் இனிதே வெளிபடுத்தின.
அமீனா ஹுசைன்
“சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் நிஜத்தை போல் ஈர்க்கப்படத்தக்கவைகளாக இருந்தன. எனவே பலன்களை ஒரு குறுகிய பட்டியலுக்குள் தேர்ந்தெடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. பங்குகொண்டுள்ள கலைஞர்களின் பல புகைப்படங்களில் நுட்பமான மற்றும் ஆக்கபூர்வமான விஷயங்களை நான் மிகவும் ரசித்தேன். வெற்றியாளருக்கான எனது இறுதித் தேர்வு கொடுக்கப்பட்டதன் காரணம், புகைப்படம் அத்தகைய நுட்பத்துடன் தேவையான அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியதுடன் மிகவும் எளிமையாகவும் எளிதாகவும் தென்பட்டது. பங்குபற்றிய அனைவரது படைப்பாற்றல் மற்றும் கற்பனைக்காக புகைப்படங்களை சமர்ப்பித்த அனைவரையும் வாழ்த்துவதுடன் PRIDE மாதத்தை கொண்டாடுவதற்கும் கௌரவிப்பதற்கும் EQUAL GROUND நடத்திய இப்போட்டிக்கு நானும் ஒரு போட்டி நீதிபதியாக இருந்ததில் அதிகம் பெருமைப்படுகிறேன்.”
கேசர ரத்னவிபூஷன
“படம் இலக்கம் 54 வெற்றிக்குத் தகுதியானதாக இருந்தது, அதன் rubik’s cube லுள்ள வானவில் வண்ணங்களின் நுணுக்கத்தின் மறைமுகமான பொருள் பார்வையாளர்களின் கவனத்தை அதிகரிக்கிறது. இது மற்றவர்களுக்கு தென்படாமலிருக்கும் இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. இன்னும் ஆழமும் உந்துதலும் உள்ளது – தாழ் கோணத்தில் புல்லின் வாழ்க்கை பரவலான தோற்றத்தை விட பெரியதாக இருக்கும் என்ற நோக்கத்துடன் கூடிய கலவையின் உணர்வு தீவிரமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. படத்திலிருந்து நாம் அதிகம் ஊகிக்கலாம், மேலும் பார்த்து படிப்பதற்கு நிறைய இருக்கிறது. நம்பிக்கையற்ற தன்மையைக் கூட பாழடைந்துவிடாது காத்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை தொடுகிற இந்தப் புகைப்படமானது சிறந்த தகுதியான போட்டியின் வெற்றியாளரை வெளிப்படுகிறது என்று நான் உய்த்து உணருகிறேன்.
ரொசன்னா ஃபிளேமர்-கல்தேரா
“இந்த மெய்நிகர் PRIDE புகைப்படபோட்டிக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிறைய புகைப்படங்கள் உண்மையிலேயே நகர்த்தப்பட்டது. எனினும் இலக்கம் 54 க்குரிய புகைப்படம் என் இதயத்தை இதயத்தை ஈர்த்தது. இப்புகைப்படத்தின் கருத்து மிகவும் சுருக்கமாக மிக நெருக்கமாக இருந்ததுடன் இப்புகைப்படமானது புகைப்படக்காரரின் உணர்வுகளையும் அவளுடைய மனநிலையையும் நன்கு சித்தரித்தது”.
போட்டி நீதிபதிகளின் தெரிவுக்கான விருது, புகைப்பட எண் 54 க்கு உரித்தாகியது, இதற்குரிய வெற்றியீட்டாளர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஹபீஷா என்பவர் ஆவார், அவர் 10,000/- ஐ வெற்றிப் பரிசாகப் பெருகிறார்! வாழ்த்துக்கள் ஹபீஷா! உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்!
சமூகத்தின் தேர்வு விருது
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 2,200 க்கும் மேற்பட்ட Like-குகளுடன் புகைப்பட எண் 012க்குரிய சமூகத்தின் தேர்வு விருது வென்றவர் தருஷ. அவர் 10,000 /- பரிசை வென்றார்! வாழ்த்துக்கள் தருஷ!
மேலும் 7 பேர் தலா 2,500/- ஆறுதல் பரிசுகளை வென்றார்கள், அவர்களது பெயர்கள் கீழ்வருமாறு:
003 – Vehara
016 – Sam
028 – Nipunika
049 – Indika
058 – Gabriel
081 – Adeel
084 – Yamuna
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள். இந்த போட்டியின் நீதிபதிகளின் தெரிவுக்காக 90 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வெற்றியாளரது புகைப்படங்களுடன் அனைத்து புகைப்படங்களும் உங்கள் பார்வைகாக மிக விரைவில் ஒரு மெய்நிகர் புகைப்பட Gallery இல் பதிவேற்றப்படும்! எங்களது அடுத்த போட்டியின் விபரங்களைத் தெரிந்துக்கொள்ள எங்களது Colombo PRIDE பேஸ்புக் பக்கத்துடன் இணைந்திருங்கள். மெய்நிகர் வானவில் இசை மற்றும் நடன விழா அத்துடன் எங்களது க்குயர் பிரபலங்கள் மற்றும் LGBTIQ சமூக உறுப்பினர்களுடன் பங்கேற்கும் InstaLive Let’s Talk chats யும் கண்டு மகிழுங்கள்.
அமெரிக்க தூதரகத்தின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்! அனைவருக்கும் இனிய PRIDE!