Let’s Talk on Social Media காணொளித் தொடர்

2020 என்பது ஒரு கடினமான ஆண்டாகும், மேலும் கடுமையான சமூக தொலைதூர நடவடிக்கைகளுடன், EQUAL GROUND அமைப்பானது இந்த ஆண்டு கொழும்பு PRIDE கொண்டாட்டங்களை நடத்துவதைக்குறித்து கற்பனை செய்ய வேண்டியிருந்தது.  எங்கள் 16 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக, கொழும்பு PRIDE மெய்நிகர் ரீதியில் அமைந்தது! கொழும்பு PRIDE இன் பல அங்கங்களான, அதாவது வானவில் இசை மற்றும் நடன விழா அத்துடன் அபிமானி திரைப்பட விழா ஆகியவை இம்முறை சமூக ஊடக தளங்களில் தான் அதிகளவில் கொண்டாடப்பட்டன.  பல புதுமையான வெவ்வேறு வழிகளில் கலைஞர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் முயற்சியும் அதே வேளையில் விஷயங்களை மெருகூட்டி சுவாரஸ்யமானதாக மாற்றுவதற்கும் இன்னும் பிற புதுமையான நிகழ்வுகளும் இந்த வரிசையில் சேர்க்கப்பட்டன.

EQUAL GROUND நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான, ரொசன்னா ஃபிளேமர்-கால்தேரா கூறுகையில், “கொழும்பு PRIDE ஐ 16 ஆண்டுகளில் முதன்முறையாக ஒத்திவைப்பது மிகவும் கடினமான முடிவாக இருந்தது.

எனினும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவுக்கு நான் மிகவும் நன்றிக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.  ஏனெனில் கொழும்பு PRIDE ஐ இந்த வருடம் மெய்நிகர் மூலம்  நடத்துவதற்கு எமக்கு அளித்த உதவி இன்றியமையாதது.  அதற்கு கிடைத்த பெரும் பங்கேற்பு மிகவும் ஊக்கமளித்தது”.

கொழும்பு PRIDE எப்போதுமே பால் புதுமையர் சமூகத்தை ஊக்குவித்து வலுப்படுத்தி பல்வேறு பால் அடையாளங்களையும் அவர்களது ஒலிகளையும் அவர்கள் பகிரங்கமாக முன்வந்து கொண்டாடும் போது பெருமிதம் கொள்கிறது. நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய பல சவால்கள் இருந்தபோதிலும், 2020 ஆண்டும் அது போன்றதே. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘வலுவூட்டி அவிழ்த்துவிடு’ (அறிவு மற்றும் ஊக்கத்துடன் விடுதலையும் சுதந்திரமும் சேர்ந்தது).

முன்னோடியில்லாத பார்வையாளர்களை அடைய EQUAL GROUND மற்றும் கொழும்பு PRIDE மெய்நிகர் செல்ல நிர்பந்திக்கப்பட்டது. எங்கள் ஆன்லைன் நிகழ்வுகளின் வரிசையில், இலங்கைத் தீவு முழுவதிலுமுள்ள பால் புதுமையர் சமூகத்துடன் ஈடுபட முடியுமாயிருந்தது.  இதன் விளைவாக, இலங்கையிலுள்ள ஏராளமான LGBTIQ நபர்கள் எங்கள் அமைப்பு மற்றும் அதன் முன்னோடி பணிகள் பற்றி அறிந்து கொண்டனர்.  பரந்த ஆன்லைன் பங்கேற்புக்கு நன்றி, மேலும் சக நண்பர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும், எங்கள் ஆதரவாளர்களின் வலையமைப்பை வளர்க்கவும் இது பெரிதும் உதவியது. 

இந்த ஆண்டு கொழும்பு PRIDE இன் மெய்நிகர் பதிப்பின் கூறுகளில் ஒன்றான பிரபல பால்புதுமையர்கள் மற்றும் LGBTIQ சமூக உறுப்பினர்களுடன் தொடர்ச்சியான பேச்சின் நேர்காணல் நேரடி இன்ஸ்டாகிராம் இல் இடம்பெற்றது.

சமூக ஊடகத் தொடரில் Let’s Talk ஆனது, பால்புதுமைத் தனிநபர்களையும் ஒட்டுமொத்தமாக LGBTIQ சமூகத்தையும், அவர்களின் தாக்கங்களின் தலைப்புகள், அத்துடன் இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபலங்கள் மற்றும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த நபர்களுடனான அதிக மனம் கொண்ட உரையாடல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது.  எங்கள் பாலியல் நாட்டம் அல்லது பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு காரணமாக ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், நாம் அனைவரும் நாம் எவ்வாறு இருக்க விரும்புகிறோம் என்பதையும் இது காட்டுகிறது.

Let’s Talk ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் நடத்தப்பட்டதில் தனித்துவமான இடம் பிடித்திருந்தது.

ஆங்கில நேர்காணல்களுக்கு, ரொசன்னா ஃபிளேமர்-கல்தேரா அவர்கள் (ஈக்வல் கிரவுண்ட் இன் நிர்வாக இயக்குனர் மற்றும் கொழும்பு PRIDE இன் இயக்குனர்) பிராண்டன் இங்க்ராம் (நடிகர், ஆசிரியர், பாடகர் மற்றும் பாடலாசிரியர்), நிம்மி ஹராஸ்கம (திரைப்பட மற்றும் நாடக நடிகை, எழுத்தாளர் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு), ஹேமலலிந்த்ரே ரணவக (கொலு) (பிரபல Chef) மற்றும் யாஸ்மின் யூசுப் (வானொலி ஆளுமையாளர், decibel.lk இன் இணை நிறுவனர்) ஆகியோருடன் நேர்காணலை நடத்தினார்.

சிங்கள நேர்காணல்களை க்கௌஷால் ரணசிங்க (பத்திரிகையாளர் மற்றும் Prep Talks Convener) அவர்கள் பூமி ஹரேந்திரன் (National Transgender Network – நிர்வாக இயக்குநர்), காபிங்க் எனும் கயன் ரத்நாயக்க (Queer Artist) தஷி ஜெயவீர (பாடகர் / பாடல் எழுத்தாளர்) த்தரிந்தி தேவசுந்திர (மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் SRHR பயிற்சிப்பாளர்) ஆகியோருடன் நேர்காணலை நடத்தினார்.

தமிழ் நேர்காணல்களை பூமி ஹரேந்திரன் (National Transgender Network – நிர்வாக இயக்குநர்) அவர்கள் ஏஞ்சல் குயிற்றஸ் (Jaffna Transgender Network – நிறுவனர், LGBTIQ+ சமூக உரிமைகள் ஆர்வலர்), தென்மோலி மாக்ரெட் (தமிழ் பேசும் LGBTIQ சமூகத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்), மற்றும் அப்பத்துரை மேரி (பெண் வியாபாரி மற்றும் LGBTIQ+ ஆர்வலர்) ஆகியோருடன் நேர்காணலை நடத்தினார். இன்ஸ்டாகிராமில் உள்ள வீடியோக்கள் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களையும் அவர்கள் கருத்துகளையும் பெற்றன.  அவை பின்னர் பால் புதுமை சமூகம் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்த உற்சாகமான விவாதங்களைத்  தாண்டி இடம்பெற்றன.

மறுமொழி இடவும்