COLOMBO PRIDE 2021 க்கு உங்களை வரவேற்கிறது

மே மாதம் 25ந் திகதி, 2021கொழும்பு, இலங்கை : EQUAL GROUND, Équité Sri Lanka, Jaffna Transgender Network, National Transgender Network, Sathguna Padanama (காலி) அமைப்புகளுடன் இணைந்து COLOMBO PRIDE 2021 க்கு உங்களை வரவேற்கிறது.

இது EQUAL GROUND னால் ஏற்பாடு செய்யப்பட்ட கொழும்பு PRIDE இன் 17 வது பதிப்பாகும்.

இந்த ஆண்டு நிலவிவரும் தற்போதைய பாதகமான சூழ்நிலை காரணமாக கொண்டாட்டங்கள் பெரும்பாலும் மெய்நிகரில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும்.

இந்த ஆண்டில் ‘சக்தி, மரியாதை, சேர்த்தல் (இடங்கொடுத்தல்), பன்முகத்தன்மை, சமத்துவம்’ ஆகியன கருப்பொருளாகும்.  இன்று இந்த நாட்டில் நிலவும் பல சிக்கல்களுக்கு மத்தியிலும் இலங்கையில் உள்ள LGBTIQ சமூகத்தின் உணர்வை உள்ளடக்குவது நெகிழ்ச்சி அளிக்கிறது.

கொழும்பு PRIDE எப்போதுமே பால் புதுமையரின் அடையாளங்களின் கொண்டாட்டமாக இருந்து வருகிறது, தன் பாலீர்ப்பின பெண்கள், தன் பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்/வினாவினர் (LGBTIQ) சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள நண்பர்களையும் இனங்காண்பதில் பெருமிதம் கொள்ள ஊக்குவிக்கிறது. ஒருங்காண்மையும் நல்ல நண்பர்களையும் வளர்ப்பதுடன், பால் புதுமையரின் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் கொண்டாடவும் இது ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது. இந்த ஆண்டு, நாடு முழுவதும் இலங்கையின் வளர்ந்து வரும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டு சேர்ந்து, Colombo PRIDE ஆனது LGBTIQ சமூகத்தை இலங்கை தீவு முழுவதும் PRIDE இன் மூலம் விரிவுபடுத்தி ஊக்குவிக்கிறது.

“கொழும்பு PRIDE ஐ நாடு முழுவதும் பால் புதுமையரின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை  கொண்டாடி விரிவுபடுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கடினமான காலக்கட்டத்தில், எங்கள் உண்மையான  தன்மையுடன் கூடிய உள்ளார்ந்த நபர்களைக் கொண்டாட எங்களுக்கு பாதுகாப்பான நிலைமைத் தேவைபடுகின்றது. நாங்கள் எல்லோரும் ஒரு பெரிய குடும்பத்தின் அங்கங்களாக இருக்கிறோம், இந்த மனப்பான்மையில், எங்கள் சகோதர சகோதரிகள் அனைவரையும் PRIDE உடன் சேர்க்க நாடு முழுவதையும் அடைய முயல்கிறோம். இலங்கையின் சட்டங்கள் LGBTIQ சமூகத்துக்கு சார்பானதாக இல்லை என்றாலும், பொது சமுதாயம் எங்களை நங்கள் இருக்கின்ற வண்ணத்துடன் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதைக் காட்ட விரும்புகிறோம். எங்கள் மாறுபட்ட பாலியல் நாட்டங்கள் மற்றும் பாலின அடையாளங்கள், பாலியல் வெளிப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பதற்குப் பதிலாக, இந்த வேறுபாடுகளில் மகிழ்ச்சியைக் காண நாங்கள் விரும்புகிறோம், மேலும் இதைச் செய்யும்படி நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் ஊக்குவிக்கிறோம்.” (Rosanna Flamer-Caldera, EQUAL GROUND).

“Covid-19 உடன் கூடிய இந்த ஆண்டானது எங்கள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சவாலாக உள்ளது. இந்த ஆண்டு PRIDE யை கொண்டாடுவது என்பது எதிர்க்கொள்வதும் சமூகத்துக்கு உயிர்கொடுத்து மீண்டும் உற்சாகப்படுத்துவதாகும். இந்த தொற்றுநோய் சூழ்நிலையால் எங்கள் சமூக உறுப்பினர்கள் Queer/Transphobia க்கு எதிர்த்துப் போராடி அயராது உழைத்து வருகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். Colombo Pride 2021 உடன் இணைந்து சமூக ஆர்வங்களை உள்நாட்டில் உயர்த்துவதற்காக JTN தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொடங்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வடக்கில் LGBTIQ+ தெரிவுநிலை மற்றும் செயல்பாட்டின் அதிகரிப்பு காணப்பட்டது, ஆனாலும் இந்த போன்ற ஒருங்கிணைந்த PRIDE மாத முயற்சியை நாம் இதுவரை கண்டிருக்கவில்லை.  எல்லா பிராந்தியங்களிலும் சமத்துவத்தை அடைவதற்கு நாடு முழுவதும் ஒற்றுமையின் வலையமைப்புக்கள் மற்றும் கூட்டாண்மை மிகவும் முக்கியமானது! PRIDE 2021 ஐ கொண்டாடுவதற்கான கூட்டு முயற்சி ஒரு நம்பிக்கையின் திசையை நோக்குவதற்கான ஒரு படியாகும். இந்த கூட்டு முயற்சியின் மூலம் PRIDE மாதத்தை கொண்டாடுவதில்  JTN மற்றும் எங்கள் சமூக உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்! இனிய  PRIDE 2021 !! ” (Angel Queentus, Jaffna Transgender Network)

“Équité அமைப்பானது EQUAL GROUND மற்றும் பிற LGBTIQ உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து, இந்த கடினமான மற்றும் சவாலான காலங்களை நாம் எதிர்கொண்டு செல்லும்போது, ஒரு சமூகமாக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும், ஒரு ஒற்றுமையின் முன்னணியை முன்வைப்பதற்கும் உள்ள முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். COVID-19 இன் கடுமையான சவால் இருந்தபோதிலும், இந்த முறையில் PRIDE ஐ கொண்டாட முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். LGBTIQ சமூகத்திற்கு சம உரிமைகளைப் பெறுவதற்கான எங்கள் முயற்சிகளில் இந்த கூட்டு முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.” (Adhill Suraj, Équité Sri Lanka).

“EQUAL GROUND மற்றும் இந்த ஒத்துழைப்புக்கு ஒருங்கிணைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். LGBTQ+ சமூகத்திற்கு ஒரு பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதில் தீவிரமாக பணியாற்றிய சில இன்றியமையாத அமைப்புகளுடன் இணைந்து PRIDE கொண்டாட்டத்தில் ஈடுபட TheQueerAgendaSL க்கு கிடைத்த சந்தர்ப்பத்தை முன்னிட்டு பெருமிதம் கொள்கிறோம்.

பால் புதுமையாக இருக்கும்போது, தனிநபர்களாக நம்மை கொண்டாடுவது முக்கியம் என்று நாங்கள் தனிப்பட்ட முறையில் நம்புகிறோம், ஏனென்றால் தம்மைப் பற்றி பொருட்படுத்தாது செயலாற்றுவதற்கு நிறைய தைரியம் தேவை! எனினும் PRIDE மாதம் என்பது நம்மை ஒடுக்கி வாழ்கிறவர்களுக்கு எதிராக எழுந்து நிற்பதற்கு ஒரே சமூகமாக ஒன்றிணைவதுதான். நேருக்கு நேர் நிகழ்வுகளை நடாத்துவதும் / கலந்துகொள்வதும் தொடர்பாக இந்த தொற்றுநோய் பல சவால்களை நமக்கு ஏற்படுத்தியுள்ளது, இதனால், இந்த ஆண்டும் மெய்நிகர் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றோம். எவ்வாறாயினும், இந்த ஒத்துழைப்பின் மூலம், எங்களது செய்தி பரவலாக பிரகாசிக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் இருக்கிறோம்! எங்கள் சமூக உணர்வு வலுவானது! “எண்ணிக்கையில் பலம் உள்ளது,” சமூக அநீதிகள் சரமாரியாக இருந்தாலும் மாற்றத்தை உண்டாக்க வேண்டும் என்ற பழஞ்சொல் மெய்யாகிறது. ” (Queer Agenda Sri Lanka)

EQUAL GROUND தன் பாலீர்ப்பின பெண்கள், தன் பாலீர்ப்பின ஆண்கள், இருபாலீர்ப்பினர்கள், திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்/வினாவினர் (LGBTIQ) சமூகத்திற்கான பொருளாதார, சமூக, கலாச்சார, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைத் தேடும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். அனைத்து LGBTIQ தனிநபர்களுக்கும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதற்கும், மன நலம், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வலுவூட்டல், உடல்நலம், கல்வி, இருப்பிட மற்றும் சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட சுய உதவிக்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் இது கடமைப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் பெரியவர்களுக்கிடையில் (வயது வந்த) விருப்பத்துடன் மேற்கொள்ளும் தன் பாலின பாலியல் உறவுகளை நியாயப்படுத்துவதே EQUAL GROUND இன் முக்கிய குறிக்கோள்.

மேலதிக தகவல்களுக்கு media@equalgroundsrilanka.com or +94114 334 279 அல்லது அமைப்பின் இணையதளத்திலும் சமூக தளங்களாகிய Facebook, Twitter மற்றும் Instagram இல் தொடர்பு கொள்ளுங்கள்.

Équité அமைப்பானது ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் மேம்பாடு / மனிதாபிமான திட்டங்களில் அனுபவம் வாய்ந்த பல ஒழுங்கு நிபுணர்களின் நெருக்கமான குழுவை இலங்கையில் ஒன்று சேர்க்கிறது.  இது 2017 ஆம் ஆண்டில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டததுடன் இலங்கையில் ஆர்வமுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் குழுவால் இயக்கப்படுகிறது. இலங்கையில் ஓரங்கட்டப்பட்ட அமைப்புகளில் LGBTIQ  சமூகம், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு சமத்துவத்தை அடைவதே எங்கள் கண்ணோட்டமாக இருக்கிறது.

Hotline: +94717033298

Email: equitesrilanka2019@gmail.com

The Queer Agenda Sri Lanka இலங்கையில் LGBTIQ+ உரிமைகளை மேம்படுத்துவதற்காக நிதியுதவி அற்ற அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ அடிப்படையிலான அமைப்பாகும்.  எங்கள் நோக்கம் இலங்கையில் தன்பாலீர்ப்பினருக்கு பங்களிப்பதாகும்.  ஒரு பெரிய பார்வையாளர்களைக் கவரவும், இலங்கையில் உள்ள SOGIESC பிரச்சினைகளில் பால்புதுமையினர் மற்றும் எதிர்பாலின மக்களைப் பயிற்றுவிக்கவும் இது எங்களுக்கு உதவுவதால் தகவல்களைப் பரப்புவதற்கு நாங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறோம்.  மேலும், இலங்கையிலுள்ள  LGBTQ+ உரிமைகளுக்காக தீவிரமாக வாதிட்டு வரும் பால்புதுமையர் சமூகத்தின் உறுப்பினர்களை முன்னிலைப்படுத்துவதே எங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம் Queer Agenda Sri Lanka அமைப்பானது இலங்கை சமுதாயத்தில் அனைத்து மட்டங்களிலும் சமத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளலையும் ஊக்குவிக்க முயற்சிக்கும் ஒரு முயற்சியாகும்.

Email – queeragendasl@gmail.com

Instagram – @thequeeragenda.sl

ஒத்துழைப்பு கூட்டாளர்கள்:

மறுமொழி இடவும்