பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் – எங்கள் உரிமை!

கணக்கெடுப்பை எடுத்து உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்

நீங்கள் இலங்கையில் வசிக்கும் தொழில் செய்த அல்லது தொழில் செய்கின்ற LGBTIQ நபரா? ஆம் எனில், இந்த கணக்கெடுப்பை மேற்கொள்வதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யுங்கள்! EQUAL GROUND அமைப்பானது பணியிடத்தில் LGBTIQ நபர்களின் அனுபவங்கள் குறித்து ஒரு பைலட் ஆராய்ச்சி ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் தொழில் சம்பந்தமான சூழல்கள் யாவும் எல்லா LGBTIQ நபர்களுக்கு பாதுகாப்பானதாகவும், தோழமைமிக்கதாகவும் மாற்றப்பட்டு, பணியிடங்களில் பன்முகத்தன்மை மற்றும் இடங்கொடுத்தலுடன் (Diversity and Inclusion) கூடிய நல்லதொரு வலுவான இடமாக உருவாக்குவதே எங்கள் குறிக்கோளாகும். LGBTIQ அனைத்து நபர்களினதும் பணியிட அனுபவங்களின் ஒட்டுமொத்த தரவுகளைப் பெறுவதற்கு உங்களுடைய ஒவ்வொரு பதிலும் எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதுடன் இந்த ஆராய்ச்சி ஆய்வுக்கு உங்கள் பங்களிப்பு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கிறது. கீழேயுள்ள இணைப்பைப் பின்பற்றி கேள்வித்தாளை நிரப்புவதற்கு ஒரு சில நிமிடங்களை ஒதுக்குங்கள். நன்றி!


மறுமொழி இடவும்