தன்பாலீர்ப்பினவெறுப்பு பிரசங்கத்துக்கு எதிராக பொலிஸாருக்கும் அமா திஸாநாயக்கவிற்கும் மனு தாக்கல் வழங்குமாறு EQUAL GROUND மற்றும் பிற மனுதாரர்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவு

கடந்த 12ந் திகதி (வெள்ளிக்கிழமை) அன்று பொலிஸ் மா அதிபர் C. D. விக்ரமரத்ன, கண்டி எல்லையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன அலஹகோன் உட்பட ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமாகக் கூறப்படும் அமா திஸாநாயக்க ஆகியோருக்கு மனு அனுப்புவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. இப்பயிற்சியின் போது இலங்கையில் உள்ள தன்பாலீர்ப்பின பெண்கள்,  தன்பாலீர்ப்பின ஆண்கள்,  ஈர்பாலீர்ப்பினர்கள்,  திருநர்கள், இடையிலிங்கத்தவர்கள் மற்றும் பால் புதுமையர்கள்/வினவினர் (LGBTIQ) சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையிலும் பாகுபாடு காட்டும் வண்ணமும், கண்டி மற்றும் மாத்தளை பகுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள், கண்டி பொலிஸ் கேட்போர் கூடத்தில், பயிற்சி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

Equal GROUND ஆனது LGBTIQ உரிமைகளுக்காக துணை வலுகொடுத்து வாதிடும் இலங்கையின் மிகப் பழமையான அமைப்பு, சக நபர்களுடன் இணைந்து LGBTIQ சமூகத்தைப் பற்றி தவறான மற்றும் பாரபட்சமான கருத்துக்களுடன் சமூகத்தினருக்கு தீங்கிழைக்கும் வகையில், காவல்துறைக்கு பயிற்சித் திட்டத்தை நடத்தியதற்கு மேற்கூறிய பிரதிவாதிகளுக்கு எதிராக ஒரு தடை உத்தரவின் (Prohibition) தன்மையில் ஒரு ஆணையைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளது.

ஜூலை 2021 இல் நடைபெற்ற இப்பயிற்சி நிகழ்ச்சியில் பேசும் போது, இலங்கையில் வாழும் “தன்பாலீர்ப்பினர்கள்” மற்றவர்களை, குறிப்பாக இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களையும் LGBTIQ சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்ற முயற்சிப்பதாக திஸாநாயக்க அவர்கள் கூறியுள்ளார்.  மேலும் LGBTIQ நபராக இருப்பது இயற்கைக்கு மாறானது என்றும் உயிரியல் மற்றும் சமூக விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார், ஏனெனில் இத்தகைய உறவுமுறைகள் இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்காது என்று கூறியது மட்டுமல்லாது, பங்கேற்பாளர்கள் அத்தகைய உறவுகளுக்கு எதிரானவர்கள் என்று உரத்த குரலில் சத்தமாக பதில் கூறும்படி பங்கேற்பாளர்களிடம் கேட்டுமுள்ளார். 

இப்பேற்பட்ட பயிற்சிகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் போன்றவற்றை இலங்கை காவல்துறை நடத்துவதைத் தடுக்கும் தடை உத்தரவை (Prohibition) மனுதாரர்கள் கோருகின்றனர். இது இலங்கையில் உள்ள LGBTIQ மக்களின் அடிப்படை உரிமைகளை ஓரங்கட்டுகிறதாயும் மீறுகிறதாயும் இருக்கின்றது.  வெவ்வேறு பாலியல் நாட்டங்கள் மற்றும் பாலின அடையாளங்கள் / வெளிப்பாடுகள் கொண்ட தனிநபர்களை இழிவுபடுத்துதல், மனிதாபிமானமற்றதாக்குதல் மற்றும் ஓரங்கட்டுதல் ஆகியவற்றுக்கு இணக்கம் தெரிவிப்பதும், அனுமதிப்பதும் அடிப்படை மனித உரிமைக்குப் பொருத்தமற்றதும் அரசியலமைப்பின் 12 வது பிரிவை மீறும் வகையிலும் உள்ளது.

இலங்கையில் LGBTIQ மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் ஒரு அமைப்பினால் சட்ட அமலாக்கத்திற்கு சவால் விடப்பட்ட ஒரு வழக்கு இலங்கையில் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.  நீதியரசர் சோபித ராஜகருண மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.  இலங்கையில் LGBTIQ அடையாளங்களை வரைபடமாக்குவது தொடர்பான EQUAL GROUND இன் ஆராய்ச்சி (2021) நடாத்தப்பட்டதில் பெரியவர் (வயதுக்குவந்த) சனத்தொகையில் 12% (18 – 65 வயதுக்குட்பட்ட) அல்லது இலங்கையில் 1,469,574 பேர் LGBTIQ என அடையாளப்படுத்தியிருந்தனர்.

அத்துடன், தன்பாலீர்ப்பின வெறுப்பு மற்றும் மாற்றுப்பாலீர்ப்பின வெறுப்புக்குளுக்குக்கான இலங்கை காவல்துறையின் நடைமுறைகளை ஆவணப்படுத்திய சான்றுகளும் உள்ளன.  இந்தச் சூழலில், இத்தகைய பயிற்சிகளை நடத்துதுவதினால் இலங்கை தண்டனைச் சட்டத்தில் இன்னும் இருக்கும் தொன்மையான, காலனித்துவச் சட்டங்கள் காரணமாக LGBTIQ சமூகம் எதிர்கொள்ளும் பாகுபாடு மற்றும் வன்முறையை அதிகப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கின்றது.

இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி (SLCP) இப் பயிற்சியின் போது கூறப்பட்ட கருத்துக்கள் பற்றிய, EQUAL GROUND இன் கடிதத்திற்கு பதிலளித்தது, அதில் தன்பாலீர்ப்பினம் மன/உடல் நோய்/சீர்குலைவு அல்லது ஒருவகையான அசாதாரணமானதொன்று என்ற திஸாநாயக்கவின் பிழையான அறிக்கையை கண்டித்திருந்தது.  “நவீன கால மனநல மருத்துவர்கள் தன்பாலீர்ப்பை ஒருவகையான மனநோயாகக் காண்பதோ அல்லது கண்டறிவதோ அல்லது அதற்கான மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றுவதோ இல்லை. தன்பாலீர்ப்பினம் ஒருவகை மனநோய் என்ற இந்த கட்டுக்கதை எங்கள் உறுப்பினர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆதார அடிப்படையிலான அறிவியலுக்கு பொருந்தாது,”என்று அதில் கூறப்பட்டது.  சம்மதத்துடன் இணங்கி (வயதுக்குவந்த) பெரியவர்களுக்கிடையில் தன் பாலின உறவுகளை குற்றமாக்கும் பழமையான சட்டங்களை ரத்து செய்யுமாறு SLCP வலுவாக அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.  மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன ஆஜராகியுள்ளார்.

EQUAL GROUND ஐ media@equalgroundsrilanka.com இல் தொடர்பு கொள்ளலாம்.

மறுமொழி இடவும்