வண்ணமயமான மற்றும் மகிழ்ச்சியான COLOMBO PRIDE 2022

மௌனம் களைந்து பலப்படு

தொடர்ந்தும் 18வது ஆண்டாக, EQUAL GROUND ஜூன் மாதத்தில், துடிப்பான, பன்முகத்தன்மை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளது.

Colombo PRIDE 2022, ‘மௌனம் களைந்து பலப்படு’ என்ற கருப்பொருளில் கவனம் செலுத்தி, இது நாம் விரும்புவதற்கும் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதற்காகவும் போராடுவதற்கான எமது சமூகத்தின் உறுதியை சித்தரிக்கிறது. எப்போதும் போல், பல்வேறு அடையாளங்கள் மற்றும் குரல்களைக் கொண்டாடும் அதே வேளையில், LGBTIQ சமூகத்தை தென்படவும், பெருமைப்படவும் ஊக்குவித்து ஊக்கமளித்தது.

முடிந்தவரை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த ஆண்டு PRIDE கொண்டாட்டங்கள் பல நேருக்கு நேர் மற்றும் மெய்நிகர் நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்தன, இதனால் இலங்கையின் எல்லா பகுதிகளிலுமிருந்து எல்லோராலும் இணைய முடியுமாயிருந்தது.

ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர் ஸ்தானிகர் திருமதி அமண்தா ஜுவல் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட மூன்று நாள், அபிமானி குயர் திரைப்பட விழாவுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. சர்வதேச மற்றும் உள்ளூர், குறுகிய மற்றும் அம்ச நீளம் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட, பால் புதுமையரின் திரைப்படங்கள் உட்பட Boy Erased, Firebird மற்றும் Badhaai Do போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள் .விழாவில் காட்டப்பட்டன.

இலங்கையில் உள்ள LGBTIQ நபர்கள் வானவில் இசை மற்றும் நடன விழாவில் தங்கள் பலதரப்பட்ட திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது. 20 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் (பாடல்கள், நடனங்கள், இசைகள்) மற்றும் 130 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பார்வையாளர்களுடன், அது நினைவில் கொள்ள வேண்டிய ஒரு இரவாக மாறியது!

கல்கிஸ்ஸ கடற்கரையில் ஒரு அழகிய சூரிய அஸ்தமனத்தின் பின்னணியில், LGBTIQ சமூகமும் அதன் கூட்டாளிகளும் ஒன்றிணைந்து வானவில் பேருந்து சவாரி மற்றும் வானவில் காத்தாடி திருவிழாவுடன் கொண்டாட்டங்கள் நிறைவுப் பெற்றது.

இதற்கிடையில், மூன்று மெய்நிகர் போட்டிகள் – குறும்படப் போட்டி, அசல் பாடல் போட்டி மற்றும் கார்ட்டூன் மற்றும் காமிக் ஸ்ட்ரிப் போட்டி – LGBTIQ நபர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை ஆராய்ந்து அற்புதமான பரிசுகளை வெல்ல மற்றொரு வாய்ப்பை வழங்கியது.

பல ஆண்டுகளாக, பல சவால்கள் இருந்தபோதிலும், PRIDE வலிமையிலிருந்து வலிமைக்கு வளர்ந்துள்ளது. இது ஒரு படிப்பினை மற்றும் உணர்திறன் பயிற்சியாகும், அங்கு பன்முகத்தன்மையின் செய்தி ஒரு முழுமையான வழியில் உரையாற்றப்படுகிறது, இது பெரிய இலங்கை குடியுரிமையால் குயர் சமூகத்தை சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகுத்தது.

இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் Colombo PRIDE 2022 ஐக் கொண்டு செல்வதற்கு EQUAL GROUND பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் இருந்தபோதிலும், Colombo PRIDE ஆனது நூற்றுக்கணக்கான LGBTIQ நபர்கள் மற்றும் கூட்டாளிகளை சென்றடைய கூடுமாயிருந்தது.

இந்த ஆண்டும், LGBTIQ சமூகத்தின் பன்முகத்தன்மை, படைப்பாற்றல் மற்றும் திறமைகளைக் கொண்டாடுவதில் PRIDE கொண்டாட்டங்கள் முன்னணியில் இருந்தது.

மறுமொழி இடவும்