இலங்கையின் பணியிட பாகுபாடுகளின் ஒரு ஆய்வு

LGBTIQ ஊழியர்களின் பணியிட அனுபவங்கள் குறித்த எங்கள் சமீபத்திய கணக்கெடுப்பில், அவர்களில் பலர் தங்கள் பாலியல் நாட்டம் மற்றும் / அல்லது பாலின அடையாளம் / பாலியல் வெளிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கும், பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் காரணமாக பணியிடத்தில் அவர்களின் உண்மையான தன்மைக்கேற்ற நபர்களாக இருப்பதற்கும் போராடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியது.
பதிலளித்தவர்களில் 58% பேர் வாய்மொழி துன்புறுத்தலை அனுபவித்ததாகவும் 31% பேர் பாலியல் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் கூறியுள்ளனர். 44% பேர் அதிக பழிவாங்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர்கள் அஞ்சுகிறதினால் இதுபோன்ற துன்புறுத்தல்களை நிர்வாகத்திடம் தெரிவிக்கத் தயாராக இல்லை என்று கூறினர். துரதிர்ஷ்டவசமாக, பதிலளித்தவர்களில் 23% பேர் உளவியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல் காரணமாக தங்கள் வேலையை விட்டு வெளியேறியதையும் குறிப்பிட்டுள்ளனர்.
பணியிடங்களில் இத்தகைய பாகுபாடு LGBTIQ தனிநபர்களின் பொருளாதார பாதுகாப்பைப் பாதிக்கின்றது. இலங்கையில் பணியிடங்களில் தன்பாலீர்ப்பின, ஈர்பாலீர்ப்பின, மாற்றுபாலீர்ப்பின வெறுப்புக்களை முடிவுக்குக் கொண்டுவருவது கட்டாயமாகும்.
முழு அறிக்கையைப் படிப்பதற்கு
பணியிட பாகுபாடு குறித்த எங்களது சமீபத்திய அறிக்கையை ஆரம்பிக்கும் முகமாக அவுஸ்திரேலியா உயர் தூதரக Dr. Tom Davis, Acting Deputy High Commissioner அவர்களின் செய்தி
நன்றி!

மறுமொழி இடவும்