#PronounsMatter பிரதிப்பெயர்கள் என்பவை நாம் எவ்வாறு மற்றவர்களை குறிப்பிடுகிறோம் என்பதில் அடங்கியுள்ளது. இலங்கையிலும், உலகிலுள்ள ஏனைய பகுதிகளிலும் பிரதிபெயர்களின் பாவனை யாவும் பாலினத்தை மையமாக கொண்டே அமைந்துள்ளது. நாம் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பிரதிபெயர்களாவன அவள்/ அவளுக்கு/அவளுடைய மற்றும் அவன்/அவனுக்கு/அவனுடைய, ஆகியன அவரவரது பாலினத்தைக் குறிக்கும் சொற்களாகும். இவை பொதுவாக பொதுபாலின (தங்களது தனிப்பட்ட பாலின அடையாளமும் பாலின உணர்வும் பிறப்பின் போது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் ஒத்திருப்பதாக நினைக்கும் நபர்கள்) நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எப்படியாயினும் தற்போதய நிலவரப்படி பாலினத்தை மையமாகக் கொள்ளாமலேயே பிரதிப்பெயர்கள் பாவிக்கப்படுகின்றன. …